மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

கண்ணீர்க் குரல்கள்



பசி மயக்கத்தில்
உலர்ந்த நாவில்
தேங்கி நிற்கும்

எப்போதோ
தின்று களித்த
சோறு கறியின்
சுவை தாண்டிச்

செவிகளில் ஒலிக்கும்
" ஏதாவது சாப்பிட்டியா? "
என்கிற -

அம்மாவின் குரலில்
மனசடைக்க -
வயிறு நிரம்புகிறது.

####

மாரடைக்க
மனசு நிரம்பியெழும்
என் குரலும்
அம்மாவுக்குக் கேட்கும்

" வேளாவேளைக்கு
மருந்து சாப்பிட்டியா?"

கருத்துகள் இல்லை: