மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

தலைகீழ்

Photo: தலைகீழ்

களவையும்
கற்று மற
என்றார்கள்...

களவாகத்தான்
கற்றபோதும்,

காதலைத்
துளியேனும்
மறக்க முடிவதில்லை.

களவாடித்தான்
போவார்களென
விட்டுப் பார்த்தாலும்...

விலகி நின்றாலும்,

காயங்களைத்
தொட்டுவிடும்
தூரம் தாண்டித்தான்
விரல்களையே
வைத்திருக்கிறார்கள்.

கண்ணீர் உறைந்த
விழியிடுக்கிப்
பார்த்தாலும்....

இப்போதெல்லாம்...

தலை கீழாகத்தான்
- நிற்கிறது...
வானமும் பூமியும்
என் வாழ்வாசையும்.
        _ ரிஸ்கி ஷெரீப்.


களவையும்
கற்று மற
என்றார்கள்...

களவாகத்தான்
கற்றபோதும்,

காதலைத்
துளியேனும்
மறக்க முடிவதில்லை.

களவாடித்தான்
போவார்களென
விட்டுப் பார்த்தாலும்...

விலகி நின்றாலும்,

காயங்களைத்
தொட்டுவிடும்
தூரம் தாண்டித்தான்
விரல்களையே
வைத்திருக்கிறார்கள்.

கண்ணீர் உறைந்த
விழியிடுக்கிப்
பார்த்தாலும்....

இப்போதெல்லாம்...

தலை கீழாகத்தான்
- நிற்கிறது...
வானமும் பூமியும்
என் வாழ்வாசையும்.

_ ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: