மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

ஸீ ஸீ... சீச்சீ உன் பிறப்பு!


சாத்தான் தோட்டத்துக்
காட்டேறியின்

விஷத்துளிதான்
தனக்குள் கருக்கட்டியதாகத்
தெரிந்திருந்தால்

இந்த ஈனப்பிறவி
குடியிருந்த

பனிக்குடமும்
தன்னை மீறியுடைய
மறுத்திருக்கும்

இல்லை -
வற்றிக் கறுத்திருக்கும்.

ஸீ ஸீ...
சீச்சீ  உன் பிறப்பு!

    - ரிஸ்கி ஷெரீப்.

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

சுக நரகச் சொர்க்க காலம்




கண்மணி,

உன்
உலகம் ஒளிரக்
காத்திருந்துதான்

விரிந்திருக்கிறது...

சுருங்கிக் கொண்டிருந்த
உன் தாய் உலகம்.

முகம் கழுகிப்
பவுடரடித்த நிலை
தலைகீழாகி

பவுடர் அடித்து
முகம் கழுவிய
பைத்தியம் போலத்தான்
கரைந்திருக்கிறது...

உனக்கான
அவளது ஈரைந்து
மாத காலம்.

கண்மணி,
இக்காலம்...

பசி
ஒரு பருக்கை விடாமல்
அவளைச் சாப்பிட்டதோர்
கலிகாலம்.

ஆனாலும் அதுவேதான்
அவளுக்கென்றிருந்த
கனாக்காலம்.

அவளது படுக்கைகூட
முட்களால் வேயப்பட்டு..

தூக்கத்தின் கழுத்தில்
தூக்குக் கயிறிருந்த
துக்க காலமும்தான் அது.

அச்சம்
அவள் ஆடை தாண்டி
வந்தணைத்திருந்த
குளிர்காலமும்தான்.

குழந்தையைச் சுமக்குமோர்
குழந்தையாகவே

அலறும் மனசோடு...

எப்போதும்
கடவுளின் காலடி தேடி
ஒருக்களித்துப் படுத்திருந்த
இந்தக் கர்ப்ப காலம்

அவள் வாழ்விலோர்
சுக நரகச் சொர்க்க காலம்.

மகளே...
மலரிதழே...

ஒளிரும் நிலவே
கண்மணி,

உனக்கானதோர்
எதிர்காலத்தில் புரியக்கூடும்

உயிர் துடிக்கத் துடிக்க
இறந்து பிறந்தவுன் தாயின்
உயிர்ப்பான கடந்த காலம்.

அதுவரையில்,
எக்காலமும்

எந்த யுத்த காலமும்
உணர்த்தப் போவதில்லை
அவளது பிரசவ காலத்தை.

_ ரிஸ்கி ஷெரீப்.

புதன், 21 ஆகஸ்ட், 2013

அப்பா ஞாபகம்

வெளிச்சம்
வற்றிச் செத்த

நீண்ட சாலைகளை
விடவும்

இருட்டும் பயமும்
ஒருசேரத் துரத்தும்

சந்துகளிலும்
வளைவுகளிலும்தான்

அதிகமாக
அப்பா ஞாபகம் வருகிறது

வீட்டுக்குச்
சற்றுத் தொலைதூரம்

இரவில் தனித்து வந்த
குழந்தைக்கு.

_ ரிஸ்கி ஷெரீப்.

இனவாதப் பாம்புகளின் முடிவு



முள்ளிவாய்க்காலில்
படமெடுத்தாடிய மமதையில்

மதங்களின் மாரில்
கொத்தித் திரியத் துணிந்திருக்கும்

இனவெறிப் பாம்புகளும்

எங்கேயோயிருந்து

காத்திருந்து பார்த்திருந்து
பறந்துவரும்

இராட்சதப் பருந்தொன்றின்
பாதங்களுக்குக் கீழ் 

ஒருநாள்

தம் கழுத்தில் மிதிபட்டு
நசுங்கிச் சாகும்.

_ ரிஸ்கி ஷெரீப்.

வைரஸ்

மடிகணனியில் உன் படத்தைப்
பதிவேற்ற விழைகையில்

மனசைத் தாக்கிற்று வைரஸ்!
- ரிஸ்கி ஷெரீப்.

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

சந்தோசிக்கும் காற்று


Photo: கயவர்கள் காமுகர்கள்
கொடூர ஆட்சியாளர்கள்

செத்துத் தொலைவதில்
சந்தோசிக்கிறது...

அதுவரை அவர்களில்
உயிராக சிறைப்பட்டு
சித்திரவதைப்பட்ட
காற்று.

    - ரிஸ்கி ஷெரீப்.
கயவர்கள் காமுகர்கள்
கொடூர ஆட்சியாளர்கள்

செத்துத் தொலைவதில்
சந்தோசிக்கிறது...

அதுவரை அவர்களில்
உயிராக சிறைப்பட்டு
சித்திரவதைப்பட்ட
காற்று.

- ரிஸ்கி ஷெரீப்.