மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

கனிந்த நெருப்பும் தாழ்ந்துதான் தணிகிறது...


டையன்னத்தோரத்துப் பூக்கள்
எக்கோடையிலும் உதிர்வதில்லை

வளைந்து நெளிந்து
ஒடுங்கி விரிந்தோடுவதுதான்
நதிகளுக்கு அழகு

ஆயினும்,
காதலினால் ஆசிர்வதிக்கப்பட்ட
இருக்கைகள்
எப்போதும் நிரம்பி வழிவதில்லை.

கனிந்த நெருப்பும்
தாழ்ந்துதான் தணிகிறது...

தேகம் தின்று வென்று
தொய்ந்த காமம்போல!
#ரிஸ்கிஷெரீப் 24,10,2021