மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 2 அக்டோபர், 2019

மனசு செத்த உலகம்....



திமிரலைந்து பரவும் வீதி.....

சூழவும் புழுக்கள் அழுகியவிந்து கிடக்கும் பொட்டல்காடு...

அரசியல் ஆலாபனைச் சிற்றின்பத்தின்
வியர்வைக் குளியல் களைப்பில்
மெய்மறந்து கிடக்கும் மனிதம்....


பணவெறி பிடித்தலையும்
ஓநாய்கள் கூட்டம்.....

புறக்கணிப்பின் கசையடிகளை சதாவும் தன் முதுகில் வாங்கிப் பழகிய நிஜம்...


நிர்வாணத்தை மட்டுமே
வணங்கியெழச் சொல்லும் மதம்...

மனசு செத்த உலகம்....
ஆனாலும் மழை பெய்கிறது
அவ்வப்போது...

கடவுளின் பிரதிநிதிகள்
வாழ்ந்து கொண்டிருப்பதை
அறைந்து சொல்வதாக....

அவ்வப்போது....
இடியுடன் கூடிய மழையும் பெய்கிறது.
                       - ரிஸ்கி ஷெரீப்

கருத்துகள் இல்லை: