மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 29 ஜூன், 2013

கவிதைகளின் தேடல்



கவிதைகள்
அலைந்து
கொண்டிருக்கின்றன

காற்றில்
அறைபட்டுக் கசங்கி...

இரவுப் பனியில்
குளிர்ந்தொடுங்கி...

வெயிலில்
கறுத்துக் காய்ந்து...

மழையில் குடையின்றி
நனைந்து...

நிர்வாணமாக
அலைந்து
கொண்டிருக்கின்றன
கவிதைகள்

காட்டிலும்
மேட்டிலும்

பாலையிலும்
சோலையிலும்

கடலுக்கும்
வானுக்குமிடையிலான
ஆகாயவெளி
முழுக்கவும்

பசி பிடித்தும்
மதம் பிடித்தும்
வெறி பிடித்தும்

காதல் கசிந்து
தோள் சாய்ந்து
அழுது புலம்பவும்

கட்டியணைத்துக்
கடித்துக் குதறி
காமம் தணிக்கவும்

சமூகச்
சோகமுரைத்துக்
கடனும் பழியும்
தீர்க்கவும்...

அலைந்து
கொண்டிருக்கின்றன
இன்னும் எழுதப்படாத
அழகான கவிதைகள்

தம்மையலங்கரித்து
உடுத்திப் பார்க்கவும்
எடுத்தாளவும்
தெரிந்ததோர்

கவிதைக்காரனையோ
கவிதைக்காரியையோ தேடி.
- ரிஸ்கி ஷெரீப்.

ஹலோ...

Photo: ஹலோ...

உனக்கு அழத்தோன்றும்
ஓர் நாளில்
என்னை அழை...

சத்தியமாக நானுன்னை
சிரிக்க வைக்க மாட்டேன்

நிச்சயமாக என்னாலும்
சேர்ந்தழ முடியும்.
.......

உனக்கு
தூரத்தேயெங்காவது
ஓடிவிடத் தோன்றும்
ஓர் நாளிலும்
அச்சமுதறி 
என்னை அழை...

சத்தியமாக நானுன்னை
நின்றுவிடக் கேட்கமாட்டேன்

நிச்சயமாக என்னாலும்
சேர்ந்தோடிவர முடியும்
.......

உனக்கு
அனைத்துக் குரல்களும்
கசக்குமோர் நாளிலும்
என்னை அழை...

சத்தியமாக
நான் இரைந்து
பேசமாட்டேன்

நிச்சயமாக என்னாலும்
மவுனம் காக்க முடியும்
.......

ஆனால்,
நீயாக அழைக்குமோர் நாளில்
என்பக்கம்
நீண்ட நிசப்தமிருந்தால்...

வேகமாக வந்து
என்னைப் பார்

சேர்ந்தழவோ
சேர்ந்தோடவோ
இல்லை
மவுனமாக விழிபார்த்து
அமர்ந்திருக்கவோ

அன்றைக்கு
என் தேவை
நீயாக இருக்கலாம்.

(2001 ஜனவரி மாதம் நான் பொறுப்பாசிரியராக இருந்த செந்தூரம் (தினகரன் வாரமஞ்சரி)இதழில் எழுதிய கவிதை.


உனக்கு அழத்தோன்றும்
ஓர் நாளில்
என்னை அழை...

சத்தியமாக நானுன்னை
சிரிக்க வைக்க மாட்டேன்

நிச்சயமாக என்னாலும்
சேர்ந்தழ முடியும்.
.......

உனக்கு
தூரத்தேயெங்காவது
ஓடிவிடத் தோன்றும்
ஓர் நாளிலும்
அச்சமுதறி
என்னை அழை...

சத்தியமாக நானுன்னை
நின்றுவிடக் கேட்கமாட்டேன்

நிச்சயமாக என்னாலும்
சேர்ந்தோடிவர முடியும்
.......

உனக்கு
அனைத்துக் குரல்களும்
கசக்குமோர் நாளிலும்
என்னை அழை...

சத்தியமாக
நான் இரைந்து
பேசமாட்டேன்

நிச்சயமாக என்னாலும்
மவுனம் காக்க முடியும்
.......

ஆனால்,
நீயாக அழைக்குமோர் நாளில்
என்பக்கம்
நீண்ட நிசப்தமிருந்தால்...

வேகமாக வந்து
என்னைப் பார்

சேர்ந்தழவோ
சேர்ந்தோடவோ
இல்லை
மவுனமாக விழிபார்த்து
அமர்ந்திருக்கவோ

அன்றைக்கு
என் தேவை
நீயாக இருக்கலாம்.

( நான் பொறுப்பாசிரியராக இருந்த செந்தூரம் (தினகரன் வாரமஞ்சரி)இதழில்
2001 ஜனவரி மாதம் எழுதிய கவிதை.)

தனிமை தகிக்கிறது... உள்தாமரை அவிகிறது


தனிமை தகிக்கிறது
உள்தாமரை அவிகிறது

காதல் 
அலைவரிசையில்...

மனசுகள் சினுங்கும் 
- காலத்தில்

என் காதல் மட்டும்
பாலையில் பெய்த
மழையாகிப் போனதேன்?
......

தோழி,
நலமாயில்லை.
நலமாயிருக்கிறாயா?

நட்புக் காம்பெல்லாம்
அரித்துவிட்ட நிலையில்
தனிமை தகிக்கிறது
உள்தாமரை அவிகிறது

மருண்டு மிரண்டு
கண்முன்னே
வாழ்க்கை திகைக்கிறது
......

நான் இப்போது
எனக்கே நானில்லையா?

என்ன ஆச்சு
எல்லாம்
போயே போச்சு
......

உயிர்ப்பின் பாக்கியமாய்
உன்மீதான காதலைச்
சொல்லலாம்...

எண்ணெய் வற்றவும்
- எரியும்
என் வேதனையைச்
சொல்ல முடியாதடி
......

புரண்டு படுத்தாலும்
இப்போதெல்லாம் 
விழிகள் திறந்தே 
கிடக்கின்றன

வெற்றுத் தரையிலும்
சுவரிலும்தான் 
சாய்ந்து கொள்கிறது
ஆசை குடித்த விரக்தி

சாலையைக் 
கடக்கும்போதும்
சவக்காட்டைக் கடக்கும்
பிரமை

அழுகத் தொடங்கிற்றோ
ஆளுமை? இல்லை
அழத்தொடங்கிற்று
பச்சை மண் மனசு
.......

உடைந்து உள்ளே 
நான் 
உயிர்த்திருக்கும்போதே

உயிரிழந்திருக்கும்
இந்தச் சோகம்
உன்னில் உணரப்பட
- வேண்டுமாயின்...

நீயொரு நிமிடம்
நானாக
வாழ்ந்து பார்க்க வேண்டும்

நீ விட்டுச் சென்றயிடத்தில்
உன் வாசம் பிடித்துக்
காத்திருக்கும்
என் தவிப்பையுணர...

குறைந்தபட்சம்
நீயொரு பூவாக
இருக்க வேண்டும்
......
நலமாயில்லை...
நலமாயிருக்கிறாயா?
......

என்னையே பதக்கமெனச்
சூடியிருந்த
என் தேவதையே...

மனிதர்களைத் தின்ற
வாழ்க்கையில்
என்னைத் தின்றது
உன் காதலடி...

தனிமை தகிக்கிறது
உள்தாமரை அவிகிறது...

உனது நான்
உயிரில் இறக்கும்வரை
உன் நினவுகளின் வெள்ளம்
என்னை 
விழுங்கிக்கொண்டுதானிருக்கும்.
        
        - ரிஸ்கி ஷெரீப்.


காதல்
அலைவரிசையில்...

மனசுகள் சினுங்கும்
- காலத்தில்

என் காதல் மட்டும்
பாலையில் பெய்த
மழையாகிப் போனதேன்?
......

தோழி,
நலமாயில்லை.
நலமாயிருக்கிறாயா?

நட்புக் காம்பெல்லாம்
அரித்துவிட்ட நிலையில்
தனிமை தகிக்கிறது
உள்தாமரை அவிகிறது

மருண்டு மிரண்டு
கண்முன்னே
வாழ்க்கை திகைக்கிறது
......

நான் இப்போது
எனக்கே நானில்லையா?

என்ன ஆச்சு
எல்லாம்
போயே போச்சு
......

உயிர்ப்பின் பாக்கியமாய்
உன்மீதான காதலைச்
சொல்லலாம்...

எண்ணெய் வற்றவும்
- எரியும்
என் வேதனையைச்
சொல்ல முடியாதடி
......

புரண்டு படுத்தாலும்
இப்போதெல்லாம்
விழிகள் திறந்தே
கிடக்கின்றன

வெற்றுத் தரையிலும்
சுவரிலும்தான்
சாய்ந்து கொள்கிறது
ஆசை குடித்த விரக்தி

சாலையைக்
கடக்கும்போதும்
சவக்காட்டைக் கடக்கும்
பிரமை

அழுகத் தொடங்கிற்றோ
ஆளுமை? இல்லை
அழத்தொடங்கிற்று
பச்சை மண் மனசு
.......

உடைந்து உள்ளே
நான்
உயிர்த்திருக்கும்போதே

உயிரிழந்திருக்கும்
இந்தச் சோகம்
உன்னில் உணரப்பட
- வேண்டுமாயின்...

நீயொரு நிமிடம்
நானாக
வாழ்ந்து பார்க்க வேண்டும்

நீ விட்டுச் சென்றயிடத்தில்
உன் வாசம் பிடித்துக்
காத்திருக்கும்
என் தவிப்பையுணர...

குறைந்தபட்சம்
நீயொரு பூவாக
இருக்க வேண்டும்
......
நலமாயில்லை...
நலமாயிருக்கிறாயா?
......

என்னையே பதக்கமெனச்
சூடியிருந்த
என் தேவதையே...

மனிதர்களைத் தின்ற
வாழ்க்கையில்
என்னைத் தின்றது
உன் காதலடி...

தனிமை தகிக்கிறது
உள்தாமரை அவிகிறது...

உனது நான்
உயிரில் இறக்கும்வரை
உன் நினவுகளின் வெள்ளம்
என்னை
விழுங்கிக்கொண்டுதானிருக்கும்.

- ரிஸ்கி ஷெரீப்.

வியாழன், 27 ஜூன், 2013

13ஆம் சதி




Photo: 13ஆம் சதி

ஜனநாயகத்தின்
தலை மழிக்கப்பட்டு...

சர்வாதிகாரத்தின்
சவரக்கத்தி முனையில்
உயிரலறத் தவிக்கிறது
13ன் குரல்வளை

சிறுபான்மையின்
உயிர்வளை

அப்படியிருக்க...
பௌத்தத்துக்கு எதிரான
சிலந்தி வலையென்றே
பின்னுகிறார்கள்
சதிவலை

இது -

இறைமை
கிளறிக் கீறிய
இன்னுமோர்
இனச்சுத்திகரிப்பு...

சிறுபான்மைக்
களையெடுப்பு...

ஒரே தேசம்
ஒரே குடை
ஒரே மக்களென,

வார்த்தையினிக்க
அணைத்துக் கொஞ்சி...

மழைப் பெருவெள்ளம்
பார்த்துக் காத்திருந்து
குப்புறத் தள்ளிவிடும்
குள்ளநரித் தந்திரத் 
தாண்டவம்

உப்புக் கரைசலிலும்
அடங்கும் தாகம்
என்கிற விதண்டாவாதம்

யுத்தம் தொலைத்த
துணிவின் அகங்காரம்

சின்னத் தீவின்
சிங்களமய
சிகையலங்காரம்

சிறுகட்சித் துவேஷிகளின்
சுயநல இருப்புக்கான
சில்வண்டு ரீங்காரம்

இனவாத வக்கிரத்தின்
இன்னுமோர் அடையாளம்
              (தொடரும்)


ஜனநாயகத்தின்
தலை மழிக்கப்பட்டு...

சர்வாதிகாரத்தின்
சவரக்கத்தி முனையில்
உயிரலறத் தவிக்கிறது
13ன் குரல்வளை

சிறுபான்மையின்
உயிர்வளை

அப்படியிருக்க...
பௌத்தத்துக்கு எதிரான
சிலந்தி வலையென்றே
பின்னுகிறார்கள்
சதிவலை

இது -

இறைமை
கிளறிக் கீறிய
இன்னுமோர்
இனச்சுத்திகரிப்பு...

சிறுபான்மைக்
களையெடுப்பு...

ஒரே தேசம்
ஒரே குடை
ஒரே மக்களென,

வார்த்தையினிக்க
அணைத்துக் கொஞ்சி...

மழைப் பெருவெள்ளம்
பார்த்துக் காத்திருந்து
குப்புறத் தள்ளிவிடும்
குள்ளநரித் தந்திரத்
தாண்டவம்

உப்புக் கரைசலிலும்
அடங்கும் தாகம்
என்கிற விதண்டாவாதம்

யுத்தம் தொலைத்த
துணிவின் அகங்காரம்

சின்னத் தீவின்
சிங்களமய
சிகையலங்காரம்

சிறுகட்சித் துவேஷிகளின்
சுயநல இருப்புக்கான
சில்வண்டு ரீங்காரம்

இனவாத வக்கிரத்தின்
இன்னுமோர் அடையாளம்
(தொடரும்)