மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 3 ஜூன், 2015

கொஞ்சம் அழப் பழகேன்....


இச்சைகளைக் குறிவைத்து
சதாவும் மூச்சிறைக்க
ஓடிக்கொண்டிருக்கும் மனிதா,

இரக்கமற்ற உன் விழிகளில்
இருதுளி எச்சிலெடுத்தொற்றி,

இறுக்கம் தளர்ந்த முகத்தோடும்
அரிதாரம் களைந்த மனசோடும்

இக்கணமாவது கொஞ்சம்
துக்கம் சேமித்தழப் பழகேன்

அந்த
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்காக!
- ரிஸ்கி ஷெரீப்