மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 23 டிசம்பர், 2013

கறுப்புக் குடையாக...



பார்வையில் மட்டும்
வர்ணங்கள் தெறிக்க

நனையக் காத்திருக்கும்
கறுப்புக் குடையாகத்தான்
விரிந்திருக்கிறது....

என்னை எதிர்கொண்டு
கொல்லும்
உன் மவுனம்!

_ ரிஸ்கி ஷெரீப்

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

மனசின் வரிகள்


நீ சுருட்டியெறிந்த
வெற்றுத்தாளிலும்
வாசிக்க முடிகிறது...

உன்
மனசின் வரிகளை!

_ ரிஸ்கி ஷெரீப்.

சனி, 21 டிசம்பர், 2013

கவிதையின் நறுமணம்


பூக்களில்
முகர்ந்து தேடி
ஏன் தோற்கிறாய்

உனக்கான
எனது கவிதையின்
நறுமணத்தை!

- ரிஸ்கி ஷெரீப்.

வெள்ளி, 20 டிசம்பர், 2013

தெய்வத்தின் பாதம் கழுகி...



தெய்வத்தின்
பாதம் கழுகித்

தன் பாவம்
கரைத்துக் கொள்கிறது...

ஊரைப் புரட்டித்
திமிர் பிடித்தோடி

உயிர்களைக்
குடித்துப் பெருத்து

நெடுநாள்
வற்றாதிருந்த
பெருவெள்ளம்!
 

- ரிஸ்கி ஷெரீப்.

திங்கள், 16 டிசம்பர், 2013

அடிவயிற்று நெருப்பு



அடுப்பாகப்
பற்றியெரியும்
அடிவயிறு...

கொதிக்கும் மனசுக்குள்
வெந்தவிகின்றன
பிரச்சினைகள்!
  
- ரிஸ்கி ஷெரீப்.

வியாழன், 12 டிசம்பர், 2013

என் விழி மூடுமோர் கணம்...



ஒரு திரைப்படத்துக்காக நான் இயற்றிய பாடல்...

என் விழி மூடுமோர் கணம் துயில் கொள்ள வாயேன்
என் விரல் தூரிகை தொட்டெடுக்கும் துளியாக வாயேன்
தனிச்சாமம் வியர்த்துருகும் உடலாக வாயேன்
தளர்ந்துருகும் தொண்டைக்கோர் புனலாக வாயேன்...
(என் விழி மூடுமோர்)

மண்ணாசை பொன்னாசை எனக்கேதுமில்லை 

பெண்ணாசையென்றாலும் உன்னோட எல்லை
வாழ்வாசை என்றென்றும் சாகாத தொல்லை
தீயாசை தோற்காது எரிக்காமல் என்னை...
(என் விழி மூடுமோர்)


காற்றாக அலைகின்றேன் உன்னிதழ் வருடிவாழ
காட்டாறாகக் கொதிக்கின்றேன் நீயழுது மாள
கூவாத குயிலாகத் துடிக்கும் என் காதல்
தோகை விரிக்காத மயிலாகத்தான் நோகும்
தொடரும்

வெள்ளி, 6 டிசம்பர், 2013

மரணத்துக்கும் பெருமை


மண்டேலாவை
வாரியெடுத்து

அணைத்து உடுத்தி...

மறுபடியும் தன்னை
அலங்கரித்துக்கொண்டது
மரணம்!
- ரிஸ்கி ஷெரீப்.