மொத்தப் பக்கக்காட்சிகள்
திங்கள், 22 ஏப்ரல், 2013
ஞாயிறு, 21 ஏப்ரல், 2013
சனி, 20 ஏப்ரல், 2013
வெள்ளி, 19 ஏப்ரல், 2013
வியாழன், 18 ஏப்ரல், 2013
அந்தக்கால அம்மாக்கள் அனுபவித்த கஷ்ட்டங்கள்
துணி மலம்
கழுகும்
துளிநேரக்
காத்திருப்பில்
சலவையியந்திரச்
சில்லுகளில்
சிக்குண்டு
திணறித் தவித்துப்
பின்னோக்கிச்
சுழல்கின்றன
தலை கனக்க
அழுக்குத்துணிப்
பொட்டலமும்
இடுப்பில்
சரிந்துவிடாப்
பக்குவத்தில்
இருத்திய
குழந்தையுமாய்
முகஞ்சுளிக்காமல்
மூச்சிறைத்து
செருப்பற்றும்
வெறுப்பற்றும்
வேகும் வெயில்
தின்ன நடந்து
ஆற்றுக் கல்லுகளில்
அறைந்தடித்து
அலசிக் கழுகிக்குளித்து
வரும் வழியில்
வியர்வையும்
விறகுமெடுத்து வந்து
அடுப்பெரிக்க
ஆயத்தமான
அந்தக்கால
அம்மாக்கள்
பட்டனுபவித்த
கஷ்ட்டங்கள்.
ரிஸ்கி ஷெரீப்.
கழுகும்
துளிநேரக்
காத்திருப்பில்
சலவையியந்திரச்
சில்லுகளில்
சிக்குண்டு
திணறித் தவித்துப்
பின்னோக்கிச்
சுழல்கின்றன
தலை கனக்க
அழுக்குத்துணிப்
பொட்டலமும்
இடுப்பில்
சரிந்துவிடாப்
பக்குவத்தில்
இருத்திய
குழந்தையுமாய்
முகஞ்சுளிக்காமல்
மூச்சிறைத்து
செருப்பற்றும்
வெறுப்பற்றும்
வேகும் வெயில்
தின்ன நடந்து
ஆற்றுக் கல்லுகளில்
அறைந்தடித்து
அலசிக் கழுகிக்குளித்து
வரும் வழியில்
வியர்வையும்
விறகுமெடுத்து வந்து
அடுப்பெரிக்க
ஆயத்தமான
அந்தக்கால
அம்மாக்கள்
பட்டனுபவித்த
கஷ்ட்டங்கள்.
ரிஸ்கி ஷெரீப்.
புதன், 17 ஏப்ரல், 2013
பூமியதிர்ச்சி
மரமேந்திப் ப்ரார்த்தித்து
மழை வேண்டித் தந்த
மகாராணி.
மலர்கள் மனிதர்கள்
மலைகள் மரங்கள்
உயிரினங்களையும்
குழந்தைகளாகவே
குதூகலித்துத் தாலாட்டித்
தன் மடியில்
இருக்கை தந்தமர்த்தித்
தளர்ந்தஞ்சிடாது
வளர்த்துவிட்ட தாய்.
வனப்பும் வாசமும்
சுகமும் சுவாசமும்
அழகாய் ஒருசேர
ஊட்டிச்சுகித்த சொர்க்கம்.
மணக்கும்
மூச்சணிந்தெல்லாம்
உலாவரப் பார்த்து
ரசித்த மனசு.
மூச்சிறந்து நாறும்
உடல்களையும்
எடுத்தெறிந்திடாத
இத்தெய்வத்தை,
பாம்புகளும்
புற்றுக் கோவில்
கட்டித்தான்
வணங்கியிருக்கின்றன.
உலர்ந்துதிர மனசின்றி
விரும்பிக் கீழே
இறங்கியிருக்கின்றன
இத்தாயை ஆசீர்வதிக்கப்
புறப்பட்ட பூக்களும்.
காற்று இவள்
உடன்பிறப்பு.
எப்போதுமே
தலைகோதித்
துணையிருந்தாலும்
துயருறும் வேளை
எதையும் வெளிக்காட்டிக்
கொள்ளாமல்...
சோகம் உடுத்தித்
தனக்குள் மவுனமாகவே
அடக்கியழத் தெரிந்த
இந்த அற்புத அன்னை,
எப்பொதும்
திட்டித் தீர்த்ததில்லை
தன்னையுதைத்து
மிதித்த கால்களையும்.
அப்படியிருந்தும்,
தலை மழித்து
மொட்டையடித்துத்தான்
பூமித் தாயைச்
சித்திரவதை செய்திருக்கிறான்
நாகரிக வெறிபிடித்து
அபிவிருத்திப் போதை
தலைக்கேறியலைந்த
மனிதம் -
தொலைத்த அரக்கன்.
இயற்கையழிக்கப்
புறப்பட்ட இவன்
தாயைப் புனரவும்
கூச்சமற்ற பாவி.
மூச்சுத் திணறத்
திமிர வருத்தி
அடுக்கடுக்காய்
உடலேறியழுத்தி
உதடு கிழித்து
மாராப்பு விலக்கி
மார் குதறி...
மல்லாக்கப் புரட்டி
முதுகு கீறி
மானம் பறித்ததில்தான்
நொந்து போனதோ
இவள் பெண்மை.
நதிகளும் அருவிகளும்
தன்னைச் சேர வராமல்
வற்றிப்போனதில்
கடலுக்கும் சந்தேகம்
கடலன்னை
பூமித்தாயைத்
தன் தோளில்
தாங்கிய தமக்கை.
அழுகை தோற்கக்
கதறுவதில் உடன்பாடில்லாக்
கோபத்தில் எட்டியுதைக்கத்
திணறித் தெறிக்கின்றன
கடலன்னைக் -
காலடித் தீத்தட்டுக்கள்.
அதிர்ச்சியிலுறைந்து
வெடித்துச் சிதறுகிறது
பூமித்தாயின் சிறுபகுதி.
- ரிஸ்கி ஷெரீப்.
செவ்வாய், 16 ஏப்ரல், 2013
திங்கள், 15 ஏப்ரல், 2013
ஞாயிறு, 14 ஏப்ரல், 2013
சனி, 13 ஏப்ரல், 2013
வெள்ளி, 12 ஏப்ரல், 2013
புதன், 10 ஏப்ரல், 2013
திங்கள், 8 ஏப்ரல், 2013
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
உயிர் துடிக்கும் நிராகரிப்பு
எழுதத் தவறிய
பேனா -
எழுத்துச் சிதைந்த
கடிதங்கள்...
உழுது தேய்ந்த
சீப்பு -
உடுத்து எறிந்த
ஆடைகள்...
கசக்கித் தந்த
கைக்குட்டை -
கனியத் தந்த
வாழ்த்தட்டைகள்...
சிலிர்க்கத் தந்த
மயிலிறகு -
சினக்கத் தந்த
முத்தங்களென,
எனதெல்லாம்
உனதென -
உயில்போலப்
பத்திரப்படுத்தத்
தெரிந்த
உன்னால் -
எப்படி முடிந்தது,
என்னை மட்டும்
உயிர் துடிக்க
நிராகரிக்க?
- ரிஸ்கி ஷெரீப்.
மகளிர் தினம் எதற்காக?
எரிய மறுக்கும் விறகடுப்பின்
சாம்பர் குளித்துச் சாதம்
வடிக்க விழையும் இளந்தாய்
சாம்பர் குளித்துச் சாதம்
வடிக்க விழையும் இளந்தாய்
குழந்தைப் பசியலறல் பொறுத்தும்-
தன்னாசை பொத்திக் கசக்கியும்தான்
இன்றைய பகல் பொழுதையும்
எந்நாளும்போலக்
கசந்தும் காதலற்றும்
இரத்த விறாளாகி
வியர்வையெரிக்கத்தான்
கழிக்க வேண்டியிருக்கும்
குடிகாரக் கணவனின்
விலங்கிச்சைப் பிடிக்குள்
மனசலறிச் செத்து...
அழகுத் தோல் முகம்
களையிழக்க முளைக்கும்
கறுப்புத் தேமல்களுக்குத்
தெரியப் போவதில்லை...
விருந்தோம்பல் தினத்தின்
மகிமையும் மகத்துவமும்.
ரிஸ்கி ஷெரீப்
உனக்கான கவிதை
தாகித்ததோர் பொழுதில்
தண்ணீர் கேட்டேன்,
-தந்தாய்.
உடைந்ததோர் பொழுதில்
சுவாசிக்கச் சிறுதுளி
காற்றுக் கேட்டேன்,
கொடுத்தாய்.
நனைந்ததோர் பொழுதில்
தலைதுவட்டவுன்
துவாய் கேட்டேன்,
தாவனியெடுத்துத்
துடைத்துவிட்டாய்.
உறங்கத் தோன்றியதோர்
பொழுதில்
மார் மத்தியில்
ஒரு பாய் கேட்டேன்,
மார் மத்தியில்
ஒரு பாய் கேட்டேன்,
விழியும் பாயும் ஒன்றாக
விரித்தென்னைத்
தாங்கிக் கொண்டாய்.
பசியெடுத்துத் தளர்ந்தபோதும்
பாலூட்டினாய்,
உணர்வுகளையும் பிசைந்து.
நான் சிரிக்கச்
சில-
பற்கள் கேட்டபோதும்,
கன்னக்குளியோடு
வெண் முத்துக்களையும்
அள்ளிக்கொட்டினாய்.
கோபம் கேட்டபோது
கன்னச் சிவப்பும்...
சில்மிசங்கள் கேட்டபோது
சினுங்கல்களும்...
என்னைக் கேட்டபோது
- உன்னையும்,
உன்னைக் கேட்டபோது
- என்னையும்
இப்படி...இப்படியாக
மனசாரக் காதலும்
உடலாரக் காமமுமாய்...
அனைத்தும்
நான் கேட்கத்
தந்தவுனக்கெதுவும்
காலத்துக்கும்
நான் தரவில்லையே
கண்மணி...
- கண்ணீரைத் தவிர.
_ ரிஸ்கி ஷெரீப்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







































