மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 6 ஏப்ரல், 2013

கறுப்பு

Photo: கறுப்பு

எப்பப் பாரு....

கறுப்பை மட்டும்
- ஏன்
குறை சொல்லித் திரிகிறது
- உலகம் ?

துக்கத்தின்
நிறம் என்பதாலா...
தூக்கத்தின்
நிறம் என்பதாலா....

இருளின் நிறம்
என்பதாலா....
இருட்டின் நிறம்
என்பதாலா....

புரியவேயில்லை..

கறுப்பு மட்டும்தான்
கசக்குமென்றிருந்தால்...

வர்ணங்கள் மட்டுமென்ன
இனிக்கவா செய்கின்றன?

உழைப்பதும் வியர்ப்பதும்
பகல்களிலென்றாலும்....
விதைப்பதும் குளிர்வதும்
அதிகம் இரவுகளில்தானே...

எனக்கென்னமோ...

வர்ணங்களின் அன்னையே
இந்தக் கறுப்புத்தான்
என்று படுகிறது.....

அடுத்தவர் போல
அதை மலடியென்று
அழைப்பதில்
எனக்கு உடன்பாடில்லை.

கறுவிழிகள்தானே
உங்களுக்கும்....

ஓவியங்களைக் கொஞ்சம்
உற்றுப் பாருங்கள்,

அழகான வர்ணங்களைத்
தாங்கிப் பிடித்திருப்பதே
இந்தக் கறுப்புத்தான்
என்று புரியும்

அன்பானவர்களே....

அருவெறுத்தாலும் சரி
வெறுத்தாலும் சரி
இதன்பிறகாவது
அதன்மீது
காறியுமிழாதீர்கள்.

பாவம்....

தனக்குள்ளும்
ஒரு வெள்ளை
மனசிருந்து
அது தவிக்கக்கூடும்.

_ ரிஸ்கி ஷெரீப்


எப்பப் பாரு....

கறுப்பை மட்டுமேன்
குறை சொல்லித் 
திரிகிறது உலகம் ?

துக்கத்தின்
நிறம் என்பதாலா...
தூக்கத்தின்
நிறம் என்பதாலா....

இருளின் நிறம்
என்பதாலா....
இருட்டின் நிறம்
என்பதாலா....

புரியவேயில்லை..

கறுப்பு மட்டும்தான்
கசக்குமென்றிருந்தால்...

வர்ணங்கள் மட்டுமென்ன
இனிக்கவா செய்கின்றன?

உழைப்பதும் வியர்ப்பதும்
பகல்களிலென்றாலும்....
விதைப்பதும் குளிர்வதும்
அதிகம் இரவுகளில்தானே...

எனக்கென்னமோ...

வர்ணங்களின் அன்னையே
இந்தக் கறுப்புத்தான்
என்று படுகிறது.....

அடுத்தவர் போல
அதை மலடியென்று
அழைப்பதில்
எனக்கு உடன்பாடில்லை.

கறுவிழிகள்தானே
உங்களுக்கும்....

ஓவியங்களைக் கொஞ்சம்
உற்றுப் பாருங்கள்,

அழகான வர்ணங்களைத்
தாங்கிப் பிடித்திருப்பதே
இந்தக் கறுப்புத்தான்
என்று புரியும்

அன்பானவர்களே....

அருவெறுத்தாலும் சரி
வெறுத்தாலும் சரி
இதன்பிறகாவது
அதன்மீது...
 
கரித்துக்கொட்டிக்
காறியுமிழாதீர்கள்.

பாவம்....

தனக்குள்ளும்
ஒரு வெள்ளை
மனசிருந்து
அது தவிக்கக்கூடும்.

_ ரிஸ்கி ஷெரீப்

கருத்துகள் இல்லை: