மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 6 ஏப்ரல், 2013

காதலர் தினம் எதற்காக?

  1. Photo: காதலர் தினம்
எதற்காக?

எனக்கும்
உனக்கும்....

அவனுக்கும்
அவளுக்கும்...

நினைத்துப்
பார்க்கும் மட்டில்
மறந்துவிட்டிருக்கிறதா
- காதல்?

இல்லை -
மரித்துப் போயிருக்கிறதா?

மறந்தும்
மரித்தும்தான்
- விட்டிருந்தாலும்....

மீட்டிப் பார்ப்பதற்கு
ஒரேயொரு நாளாக
ஏன் -
மட்டுபடுத்தப் பட்டிருக்கிறது
இந்த நாள்?

காதல்....
காலத்துக்குமான சுவாசம்,

கடைசி மூச்சுவரைக்குமான
இம்சை,,

கரைத்துக் குடித்தாலும்
ஒரு நாளில்
-அடங்காத் தாகம்,

சுகத்தைச்
சுருக்கிச்
சொல்லவும் முடியாத...

வலியை
வலிந்து
விழுங்கவும் முடியாத....

சுக நரகச்
- சொர்க்கம்.

அப்படியிருக்க,

யார் இப்படி
மட்டுப்படுத்தி
வைத்தார்கள் கண்மணி?

யார்தான் இப்படிக்
கொச்சைப்படுத்தி
- வைத்தார்கள்?

ஆழர்த்தம் தேடின்
அகராதியும் வெட்கிக்கும்
- உன்னைப்போல...

சரி....

இந்நாள்
காதலர்களுக்கான
பெருநாளா....கரிநாளா...?

இந்நாளில்,

காதல் கவியரங்குகள்
நடத்துவதை விடவும்,

இரங்கள் கூட்டங்கள்
நிகழ்த்துவதே
சரியெனப் படுகிறது

காறணம்,,,

காதல்
மணப்பெண்ணாக
நாணியதை விடவும்
விதவையாகவே
தன்னையதிகம்
அலங்கரித்துக்
கொண்டிருக்கிறது....

மணக்கும்
மருதாணி மனசாயினும்....

சுளுக்கு விரலாகவேனும்
காதல் -
காயப்பட்டுக்
கொண்டிருப்பதே அதிகம்.

காதலர் தினம்
எதற்காக...
பட்டிமன்றத் தலைப்பாய்
அழகாய்த்தானிருக்கிறது...

அப்போதெல்லாம்....

தொலைதூரத் 
துருவங்களாயிருந்த
காதலர்களிடத்தில்
கைப்பேசிகளில்லை....
- ஆனால்,
காதல் அருகாமையில்
தவித்துச் சுகித்திருந்தது.

இப்போதெல்லாம்
அப்படியில்லை...

முகநூல்களில்
அண்மித்தமர்ந்து...
முக்காடவிழ்த்துச் சிரிக்கும்
அவனுக்கும் இவளுக்கும்
அடுத்த கணமே
அடுத்தவர் முகம்
- மறந்துபோய்...
காதல் மட்டும்
தூரத்தேயிருந்து
- வெட்கித்துச்
சுருண்டுகொள்கிறது.

வசீகரிக்கும்
எஸ்ஸெம்மஸ்
வார்த்தைகள் கூட
கூகளிடமிருந்துதான்
கடன்வாங்கப் படுகின்றன.

'காப்பி' யெடுத்தும்
'பேஸ்ட்' பண்ணியுமே
காதல் சவாரிசெய்யப்
பழகியிருக்கிறார்கள்
எல்லோரும்.

இராக்கள்
விழித்தமர்ந்து...
சிம்னி விளக்கொளியில்
சிறுகச் சிறுக
- ரசித்தெழுதிய
அப்போதைய
காதல் கடித வரிகளின்
உயிரையும் ஓசையையும்
இப்போது
உணரக்கூட முடிவதில்லை.

சிறுகச் சிறுகச்
சேமித்து வளர்த்த
- காதலை...
இப்போதெல்லாம்
செயற்கைப் பசளையில்தான்
விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

காதல் -
மனசுகளில் கருக்கொண்ட
நிலைமாறி,

இப்போதெல்லாம்...

சகலரும்
தேகச் சூட்டிலேயே
குளிர்காய்ந்து
- கொண்டிருக்கிறார்கள்.

பட்டிமன்றத்
தலைப்பாகவேனும்
இப்படியொரு
காதலர் தினம் தேவையா?
                - ரிஸ்கி ஷெரீப்.
    எனக்கும்
    உனக்கும்....

    அவனுக்கும்
    அவளுக்கும்...

    நினைத்துப்
    பார்க்கும் மட்டில்
    மறந்துவிட்டிருக்கிறதா
    - காதல்?

    இல்லை -
    மரித்துப் போயிருக்கிறதா?

    மறந்தும்
    மரித்தும்தான்
    - விட்டிருந்தாலும்....

    மீட்டிப் பார்ப்பதற்கு
    ஒரேயொரு நாளாக,

    ஏன் -
    மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது
    இந்த நாள்?

    காதல்....
    காலத்துக்குமான சுவாசம்,

    கடைசி மூச்சுவரைக்குமான
    இம்சை,,

    கரைத்துக் குடித்தாலும்
    ஒரே நாளில்
    -அடங்காத் தாகம்,

    சுகத்தைச்
    சுருக்கிச்
    சொல்லவும் முடியாத...

    வலியை
    வலிந்து
    விழுங்கவும் முடியாத....

    சுக நரகச்
    - சொர்க்கம்.

    அப்படியிருக்க,

    யார் இப்படி
    மட்டுப்படுத்தி
    வைத்தார்கள் கண்மணி?

    யார்தான் இப்படிக்
    கொச்சைப்படுத்தி
    - வைத்தார்கள்?

    ஆழர்த்தம் தேடின்
    அகராதியும் வெட்கிக்கும்
    - உன்னைப்போல...

    சரி....

    இந்நாள்
    காதலர்களுக்கான
    பெருநாளா....கரிநாளா...?

    இந்நாளில்,

    காதல் கவியரங்குகள்
    நடத்துவதை விடவும்,

    இரங்கள் கூட்டங்கள்
    நிகழ்த்துவதே
    சரியெனப் படுகிறது

    காறணம்,,,

    காதல்
    மணப்பெண்ணாக
    நாணியதை விடவும்
    விதவையாகவே
    தன்னையதிகம்
    அலங்கரித்துக்
    கொண்டிருக்கிறது....

    மணக்கும்
    மருதாணி மனசாயினும்....

    சுளுக்கு விரலாகவேனும்
    காதல் -
    காயப்பட்டுக்
    கொண்டிருப்பதே அதிகம்.

    காதலர் தினம்
    எதற்காக...
    பட்டிமன்றத் தலைப்பாய்
    அழகாய்த்தானிருக்கிறது...

    அப்போதெல்லாம்....

    தொலைதூரத்
    துருவங்களாயிருந்த
    காதலர்களிடத்தில்
    கைப்பேசிகளிருந்ததில்லை....
    ஆனால்,

    காதல் அருகாமையில்
    தவித்துச் சுகித்திருந்தது.

    இப்போதெல்லாம்
    அப்படியில்லை...

    முகநூல்களில்
    அண்மித்தமர்ந்து...
    முக்காடவிழ்த்துச் சிரிக்கும்
    அவனுக்கும் இவளுக்கும்
    அடுத்த கணமே
    அடுத்தவர் முகம்
    - மறந்துபோய்...
    காதல் மட்டும்
    தூரத்தேயிருந்து
    - வெட்கித்துச்
    சுருண்டுகொள்கிறது.

    வசீகரிக்கும்
    எஸ்ஸெம்மஸ்
    வார்த்தைகள் கூட
    கூகளிடமிருந்துதான்
    கடன்வாங்கப் படுகின்றன.

    'காப்பி' யெடுத்தும்
    'பேஸ்ட்' பண்ணியுமே
    காதல் சவாரிசெய்யப்
    பழகியிருக்கிறார்கள்
    எல்லோரும்.

    இராக்கள்
    விழித்தமர்ந்து...
    சிம்னி விளக்கொளியில்
    சிறுகச் சிறுக
    - ரசித்தெழுதிய...

    அப்போதைய
    காதல் கடித வரிகளின்
    உயிரையும் ஓசையையும்
    இப்போது
    உணரக்கூட முடிவதில்லை.

    சிறுகச் சிறுகச்
    சேமித்து வளர்த்த
    - காதலை...
    இப்போதெல்லாம்
    செயற்கைப் பசளையில்தான்
    விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    காதல் -
    மனசுகளில் கருக்கொண்ட
    நிலைமாறி,

    இப்போதெல்லாம்...

    சகலரும்
    தேகச் சூட்டிலேயே
    குளிர்காய்ந்து
    - கொண்டிருக்கிறார்கள்.

    பட்டிமன்றத்
    தலைப்பாகவேனும்
    இப்படியொரு
    காதலர் தினம் தேவையா?

    - ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: