மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

மவுனமும் சைகையும்



உயிரை அலறவிட்டே
உறக்கத்தைப்
பயமுறுத்துகிறார்கள்

ஏதோ சொல்லத்
துடித்தும்...

எதையோ
எதிர்பார்த்தும்...

மவுனமும்
சைகையும் பேசி
அடிக்கடி -

கனவுகளில்
வந்து போகும்
நெருங்கிப் பழகி
- இறந்தவர்கள்.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: