மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

மவுனம் ரசிக்கும் நிழல்

காலத்துக்கும்
கம்பீரம் -
கலந்தணிந்து
பூத்திருந்த,

மைதானப்
பெருவெளியின்
தனிமரம்,

உதிரப்போக்கோ -
உரமருந்திய
விஷமோ?

ஒருதினம்
கொத்துக்
கொத்தாகவே
உதிரத்
துவங்கியதில்,

தளர்ந்து விலகத்
தயங்கித்
தரிகெட்டுத்
தடுமாறியது,

நினைவு தெரிந்த
நெடுகாலம் -
என் இருக்கை
சுற்றியமர்ந்து...

என் மவுனம்
ரசித்துச் சுவைத்த,

எனக்கீடான ஜடமாகத்
திரிந்தலைய மறுத்த
அனாதை நிழல்.


- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: