அடையாளங்
காணவியலாததோர்
ரகசிய இடுக்கில்,
உயில் போலப்
-பதுங்கியிருக்கும்...
ஒரு-
கைக்குட்டையைக்
காண நேரின்,
கனிந்து கொஞ்சம்
கதைத்துப் பாருங்கள்...
காதல் வலியைத்
துடைக்கத் தோற்ற
_ கதையொன்றையது
சொல்லக்கூடும்.
காதலித்தவர்களும்
காதல் வயப்பட்டவர்களும்
-எல்லா வீடுகளிலும்தான்
இருக்கிறார்கள்,
எரி காயங்களை
மனசுக்குள் -
மடித்து வைத்துக்கொண்டு.
காணவியலாததோர்
ரகசிய இடுக்கில்,
உயில் போலப்
-பதுங்கியிருக்கும்...
ஒரு-
கைக்குட்டையைக்
காண நேரின்,
கனிந்து கொஞ்சம்
கதைத்துப் பாருங்கள்...
காதல் வலியைத்
துடைக்கத் தோற்ற
_ கதையொன்றையது
சொல்லக்கூடும்.
காதலித்தவர்களும்
காதல் வயப்பட்டவர்களும்
-எல்லா வீடுகளிலும்தான்
இருக்கிறார்கள்,
எரி காயங்களை
மனசுக்குள் -
மடித்து வைத்துக்கொண்டு.
_ ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக