மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

தெய்வங்கள்

சாக்கடையழுக்குப்
புழுதிச் சூழலில்

தெருவோரக்
குழந்தைகளிலும்
வாழ்கின்றன

ஆலயங்களில்
தவமிருந்தும்

வீடுகளில்
விரதமிருந்தும்
தேடிக் கிடைக்காத

தாயன்பை மிகைத்த
தெய்வங்கள்.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: