களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
காதல் விறகொடித்து...
அடி சறுக்கினாலே
உடல் சிதறுமென,
இறங்கிப் பார்க்கத்
துடித்த மனசை
மன்றாடிப் பின்னிழுத்த...
பள்ளத்தாக்குகளும்
பாழுங்கிணறுகளும்
பயமுறுத்தவேயில்லை,
காதலை
விறகொடித்துத்
தனியே நீயென்னைத்
தள்ளிவிடத் -
துணிந்த பிறகு.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக