மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

ஒரு துணியழுகை

அடித்துத் துவைத்து
முறுக்கிப் பிழிந்து
உதறித்தான்
போட்டபோதும்,

உலறத் தயங்கி
கழுத்தில் 

ஒடிந்துதான்
நொந்தழுகிறது...

மனசற்ற மணப்பெண்
முகங்கோணியாளப்பட்ட
முதலிரவு அறையில்
கசங்கித் தேம்பிய
கட்டில்விரிப்பு.


- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: