எச்சில்
கைதுடைத்து
மடித்து...
மூக்கில்
சளியுறிஞ்சிக்
கசக்கி...
வழியில்
விதியென
மிதிபடவும்,
நாய் வாயில்
நாராய்க்
கிழிபடவும்,
காகம் கொத்தித்
துகள்களாய்
விட்டுச் செல்லவும்,
சூழ்ந்தமர்ந்து
தின்றவர்கள...
பந்தாகச் சுருட்டித்
தூக்கியெறிந்து,
தனித்த போதுதான்
தெரிந்தது...
உறவுகள் வற்றிய
திசைகள் -
நான்கென்று.
- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக