மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 6 ஏப்ரல், 2013

facebook ஜாக்கிரதை


Photo: facebook ஜாக்கிரதை

இரத்தவெறிப் 
பேய்கள்
தின்று துப்பிய 
தேவதையிவள்
பெயர் அஸ்வினி.

காதலாயிவள்
நுழைந்த முகநூலில்
கஞ்சாக் கள்வர்களும்
காமம் தின்னிக்
கயவர்களும்,

தரங்கெட்ட தரகர்களும்
அணிவகுத்திருந்ததைக்
கவனிக்காத பேதை,

அடக்கமணிந்து
பொட்டுவைத்துத்
தரையிறக்கிய படத்தை,

தாசித் தெருவிலிருந்து
வந்ததோர் பேய்
ஆடை களைந்து
எடுத்துச் சென்று
ஏலம்விட்டதில்,

மானம் கசங்கியதாய்
மனசு வெந்து
நொந்து மாய்த்தாள்
தன்னுயிரைப் பரிதாபமாய்.

எப்படியோ,
பச்சோந்திகளை நம்பிய
பயணமாகத்தான் இருக்கிறது 
முகநூல் ஊர்வலமும்.

காலால் உதைத்துத்
தாளிட நினைத்தாலும்
வேண்டாமெனத்
திணறுகிறது மனசு.

என் செய்வேன்,
என்னருமைச் சகோதரிகளே,

முகநூல் ஏறும்போது முழுதாக
முக்காடிட்டுக் கொள்ளுங்கள்
இல்லை மறக்காமலொரு
முகமூடி எடுத்து வாருங்கள்.
       _ ரிஸ்கி ஷெரீப்.


இரத்தவெறிப்
பேய்கள்
தின்று துப்பிய
இந்திய தேசத்து
தேவதையிவள்...

காதலாயிவள்
நுழைந்த முகநூலில்
கஞ்சாக் கள்வர்களும்
காமம் தின்னிக்
கயவர்களும்,

தரங்கெட்ட தரகர்களும்
அணிவகுத்திருந்ததைக்
கவனிக்காத பேதை,

அடக்கமணிந்து
பொட்டுவைத்துப்
பதிவேற்றிய படத்தை,

தாசித் தெருவிலிருந்து
வந்ததோர் பேய்
ஆடை களைந்து
எடுத்துச் சென்று
ஏலம்விட்டதில்,

மானம் கசங்கியதாய்
மனசு வெந்து
நொந்து மாய்த்தாள்
தன்னுயிரைப் பரிதாபமாய்....

எப்படியோ,
பச்சோந்திகளை நம்பிய
பயணமாகத்தான் இருக்கிறது
முகநூல் ஊர்வலமும்.

காலால் உதைத்துத்
தாளிட நினைத்தாலும்
வேண்டாமெனத்
திணறுகிறது மனசு.

என் செய்வேன்,
என்னருமைச் சகோதரிகளே,

முகநூல் ஏறும்போது முழுதாக
முக்காடிட்டுக் கொள்ளுங்கள்
இல்லை மறக்காமலொரு
முகமூடி எடுத்து வாருங்கள்.

_ ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: