தாகித்ததோர் பொழுதில்
தண்ணீர் கேட்டேன்,
-தந்தாய்.
உடைந்ததோர் பொழுதில்
சுவாசிக்கச் சிறுதுளி
காற்றுக் கேட்டேன்,
கொடுத்தாய்.
நனைந்ததோர் பொழுதில்
தலைதுவட்டவுன்
துவாய் கேட்டேன்,
தாவனியெடுத்துத்
துடைத்துவிட்டாய்.
உறங்கத் தோன்றியதோர்
பொழுதில்
மார் மத்தியில்
ஒரு பாய் கேட்டேன்,
மார் மத்தியில்
ஒரு பாய் கேட்டேன்,
விழியும் பாயும் ஒன்றாக
விரித்தென்னைத்
தாங்கிக் கொண்டாய்.
பசியெடுத்துத் தளர்ந்தபோதும்
பாலூட்டினாய்,
உணர்வுகளையும் பிசைந்து.
நான் சிரிக்கச்
சில-
பற்கள் கேட்டபோதும்,
கன்னக்குளியோடு
வெண் முத்துக்களையும்
அள்ளிக்கொட்டினாய்.
கோபம் கேட்டபோது
கன்னச் சிவப்பும்...
சில்மிசங்கள் கேட்டபோது
சினுங்கல்களும்...
என்னைக் கேட்டபோது
- உன்னையும்,
உன்னைக் கேட்டபோது
- என்னையும்
இப்படி...இப்படியாக
மனசாரக் காதலும்
உடலாரக் காமமுமாய்...
அனைத்தும்
நான் கேட்கத்
தந்தவுனக்கெதுவும்
காலத்துக்கும்
நான் தரவில்லையே
கண்மணி...
- கண்ணீரைத் தவிர.
_ ரிஸ்கி ஷெரீப்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக