வுழு முறியச்
சாத்தான்கள்
சிரிக்கும்தான்
ஆனாலும் -
அடுத்த கட்டத்திற்கு
நகர்வதில்லையா
- நாம்,
ஒரு குவளைத்
தண்ணீரோ...
தயம்மன்
மண்ணோ தேடி.
மணக்கும்
- ஹலாலோ
மன்னிக்கவியலா
- ஹராமோ...
அடிக்கத் துணியும்
மனசை-
அடக்கத்
திராணியின்றி,
பொறுமையறுத்துப்
புறப்படுவதிலும்
புயலாகக் -
கிளம்புவதிலும்,
ஈமானிய
முதலுக்குத்தான்
மோசம்
- எப்போதும்.
மட்டுமின்றி,
மணலிலும்
காற்றிலும்
திரித்துப்
பழகியதில்தான்,
அனாதைகளாகத்
தவித்து வேகும்
அவலத்
தறுணங்களிலும்,
நாம் -
பற்றிப்பிடிக்கக்
கைநழுவிக்
கொண்டிருக்கிறது
ஒற்றுமையெனும்
- கயிறும்.
சாத்தான்கள்
சிரிக்கும்தான்
ஆனாலும் -
அடுத்த கட்டத்திற்கு
நகர்வதில்லையா
- நாம்,
ஒரு குவளைத்
தண்ணீரோ...
தயம்மன்
மண்ணோ தேடி.
மணக்கும்
- ஹலாலோ
மன்னிக்கவியலா
- ஹராமோ...
அடிக்கத் துணியும்
மனசை-
அடக்கத்
திராணியின்றி,
பொறுமையறுத்துப்
புறப்படுவதிலும்
புயலாகக் -
கிளம்புவதிலும்,
ஈமானிய
முதலுக்குத்தான்
மோசம்
- எப்போதும்.
மட்டுமின்றி,
மணலிலும்
காற்றிலும்
திரித்துப்
பழகியதில்தான்,
அனாதைகளாகத்
தவித்து வேகும்
அவலத்
தறுணங்களிலும்,
நாம் -
பற்றிப்பிடிக்கக்
கைநழுவிக்
கொண்டிருக்கிறது
ஒற்றுமையெனும்
- கயிறும்.
ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக