இப்பரந்த பூமியில்
இற்றைக்கும்,
இடைக்கிடையோ
இடைவிடாதோ
பொழியும் மழை,
இவர்களுக்கானதே.
இந்த இரக்க ஜீவன்கள்
உயிரிறக்க இறைக்கும் மலம்
உங்கள் ஆரோக்கியம்
என்பதுறைக்காததவரை,
இறைவனை யாசிக்கும்
உங்கள் நெஞ்சுருகிய
இறைஞ்சல்களில்,
எப்போதுமே -
பொழியப் போவதில்ல
எல்லோருக்குமான மழை.
ஆளுக்கொரு வளவில்
இவர்களுக்குத் -
தனிச் சிலை வைத்தாலும்,
உங்கள் மன மலத்தைக்
கழுவ முடியாது தோற்கும்
விடாது பெய்யும் மழை.
- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக