மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 6 ஏப்ரல், 2013

குழந்தைச் சோகம்

Photo: குழந்தைச் சோகம்

அப்பாவின் சைக்கிள்
உருளக் கேட்டே
மிரளத் துவங்கும்
குழந்தைகள்,

மிட்டாயோ
பட்டாசோ கேட்டு
மறுத்ததில்தான்
அழுவதென்றுமில்லை.

' தப்பாக ஏதும் செய்து
அடித்தாரா அப்பா' வென,

ஆத்திரம்
அடக்கத் தோற்றுத்
தனித்து விம்மி,

விரலுறிஞ்சுமிவர்களைத்
தேற்றக் கேட்டால்,

கதவின் மறைவிலோ
கட்டிலுக்கடியிலோ
கசங்கிப் பதுங்கிக்
குரல் கம்மிச்
சொல்லும் -

' அப்..பா  எந்...நாளும்
குச்..சிட்டு  வந்து...
அம்மா..வை அடிக்குது '.
      _ ரிஸ்கி ஷெரீப்.
அப்பாவின் சைக்கிள்
உருளக் கேட்டே
மிரளத் துவங்கும்
குழந்தைகள்,

மிட்டாயோ
பட்டாசோ கேட்டு
மறுத்ததில்தான்
அழுவதென்றுமில்லை.

' தப்பாக ஏதும் செய்து
அடித்தாரா அப்பா' வென,

ஆத்திரம்
அடக்கத் தோற்றுத்
தனித்து விம்மி,

விரலுறிஞ்சுமிவர்களைத்
தேற்றக் கேட்டால்,

கதவின் மறைவிலோ
கட்டிலுக்கடியிலோ
கசங்கிப் பதுங்கிக்
குரல் கம்மிச்
சொல்லும் -

' அப்..பா எந்...நாளும்
குச்..சிட்டு வந்து...
அம்மா..வை அடிக்குது '.

_ ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: