மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

காதல் வற்றிய கல்லறை

Photo: காதல் வற்றிய கல்லறை

காதல் 
கல்லறை
இத்தனை -
அழகாயிராது...

ஆயினும்,

காதல் அஸ்தி,
- கர்வத்தில்
கரைந்தயிடம்
கம்பீரமாய்த்தான்
-நிற்கிறது,

ஒரு கல்யாண
மண்டபம்போல.

சாயக் கரைசல்
சலவையில்
காதல் -
வாசம் தொலைந்து...

கலைந்த கூந்தலை
நடுவகிடெடுத்துச் சீவி,
விதவை நெற்றியில் 
பொட்டிற்றாற்போலும்...

உடுத்தி வைத்த -
பொம்மையாகவும்தான்
உட்கார்ந்திருக்கிறது
- தாஜ் மஹால்.

காதல் வீழ்ந்த
தரையில் -

தயங்கி விளையும்
சிறுபுல் ஈரம்கூடக்
கசிவதாயில்லை
இந்தக்-
' காசு மஹாலி'ல்...

'காதல் மஹாலெ'ன்று
உரைக்கக் 
கேட்க வரும்,

குளிர்ச் 
சோகத்தின்
சுருதி பிசகி...

சிறுபிள்ளைக்
கிறுக்கலாய்த்தான்
தெரிகிறது...
' மும்தாஜ் மஹால்'.

மிகைப்பூச்சு -
வர்ணம் தவிர்த்துக்
கறுப்புச் சித்திரமாகப்
பார்க்க மட்டும்தான்,

கொஞ்சம்
கனக்கிறது நெஞ்சு.

மற்றப்படியொரு
சுற்றுலாப் பயணியாய்
தரிசித்து வரலாம்
இந்தப்
பளிங்கு மாளிகையை.
       - ரிஸ்கி ஷெரீப்.
காதல்
கல்லறை
இத்தனை -
அழகாயிராது...

ஆயினும்,

காதல் அஸ்தி,
- கர்வத்தில்
கரைந்தயிடம்
கம்பீரமாய்த்தான்
-நிற்கிறது,

ஒரு கல்யாண
மண்டபம்போல.

சாயக் கரைசல்
சலவையில்
காதல் -
வாசம் தொலைந்து...

கலைந்த கூந்தலை
நடுவகிடெடுத்துச் சீவி,
விதவை நெற்றியில்
பொட்டிற்றாற்போலும்...

உடுத்தி வைத்த -
பொம்மையாகவும்தான்
உட்கார்ந்திருக்கிறது
- தாஜ் மஹால்.

காதல் வீழ்ந்த
தரையில் -

தயங்கி விளையும்
சிறுபுல் ஈரம்கூடக்
கசிவதாயில்லை
இந்தக்-
' காசு மஹாலி'ல்...

'காதல் மஹாலெ'ன்று
உரைக்கக்
கேட்க வரும்,

குளிர்ச்
சோகத்தின்
சுருதி பிசகி...

சிறுபிள்ளைக்
கிறுக்கலாய்த்தான்
தெரிகிறது...
' மும்தாஜ் மஹால்'.

மிகைப்பூச்சு -
வர்ணம் தவிர்த்துக்
கறுப்புச் சித்திரமாகப்
பார்க்க மட்டும்தான்,

கொஞ்சம்
கனக்கிறது நெஞ்சு.

மற்றப்படியொரு
சுற்றுலாப் பயணியாய்
தரிசித்து வரலாம்
இந்தப்
பளிங்கு மாளிகையை.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: