மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

மரண அறிவித்தல்

Photo: மரண அறிவித்தல்

நாய் குரைக்காத,

பேய் மரமேறிக்
- குதிக்காத,

நரி ஊளையிட்டு
- அதிராத,

நடுநிசியிரவில்
மின்சாரம் அறுந்து
புழுங்கிக் கலைந்த
தூக்கத்தை,

தொடர்ந்தணைக்கத்
தடுத்ததோர்
பூனை அழுகை.

' பூனை -
கலங்கியழுமறிகுறி
மரணச் செய்தி'யெனச்
சின்ன வயதில்
அம்மா குத்திய
- பச்சை,

நினைவில்
அகலாமலிருந்ததில்

தனித்துச்
சுருண்டிருந்ததறிந்து
வந்து 
தொற்றிக்கொண்ட
- அச்சம்,

விக்கல் இம்சையாய்
விலகாமலேயே
- இருந்தது.

பூனையும்
தொடர்ந்தழுது
கொண்டேயிருந்தது.
 
விடியச் சில
நொடிகள் முன்
அறியாமல்
தூங்கியெழுந்தபோது,

அடங்கியிருந்தது
பூனை அழுகை.

தலை கனக்கக்
கண் கசக்கி -
யன்னல் விரித்துப்
பார்க்கத் தெரிந்தது...

எச்சில் தடவிக்
குட்டிப் பூனை
இழுத்தயிழுலப்பறியாமல்,

-அசையாமல்
செத்திருந்ததோர்
தாய்ப்பூனை.
      - ரிஸ்கி ஷெரீப்.

நாய் குரைக்காத,

பேய் மரமேறிக்
- குதிக்காத,

நரி ஊளையிட்டு
- அதிராத,

நடுநிசியிரவில்
மின்சாரம் அறுந்து
புழுங்கிக் கலைந்த
தூக்கத்தை,

தொடர்ந்தணைக்கத்
தடுத்ததோர்
பூனை அழுகை.

' பூனை -
கலங்கியழுமறிகுறி
மரணச் செய்தி'யெனச்
சின்ன வயதில்
அம்மா குத்திய
- பச்சை,

நினைவில்
அகலாமலிருந்ததில்

தனித்துச்
சுருண்டிருந்ததறிந்து
வந்து
தொற்றிக்கொண்ட
- அச்சம்,

விக்கல் இம்சையாய்
விலகாமலேயே
- இருந்தது.

பூனையும்
தொடர்ந்தழுது
கொண்டேயிருந்தது.

விடியச் சில
நொடிகள் முன்
அறியாமல்
தூங்கியெழுந்தபோது,

அடங்கியிருந்தது
பூனை அழுகை.

தலை கனக்கக்
கண் கசக்கி -
யன்னல் விரித்துப்
பார்க்கத் தெரிந்தது...

எச்சில் தடவிக்
குட்டிப் பூனை
இழுத்தயிழுலப்பறியாமல்,

வேலியோரம்-
அசையாமல்
செத்திருந்ததோர்
தாய்ப்பூனை.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: