அம்மா ரகசியம்
அப்பா
வியர்த்துக்
கசங்கியுழைத்து
எடுத்து வரும்
பணத்தை,
வியர்வை கசியும்
மாரிடுக்கில்
அவசரமாகக்
கசக்கித் திணிக்கும்
அம்மா...
அடுக்களைப்பணி
களைந்து -
களைத்தாலும்
மறப்பதில்லை,
சேலைத் தலைப்பில்
ஈரக்கரம் துடைத்தே
அழகாய் -
நீவி மடித்தெண்ணி
இரு கண்ணொற்றிப்
பத்திரப்படுத்தி வைக்க.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக