மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

குரலில் உடைகிறது மனசு.


Photo: அடங்கியிருந்த
கைத்தொலைபேசியை
உயிர்ப்பிக்கக்
காத்திருந்து
வருகிறது
உன் குறுஞ்செய்தி....

' எங்கேடா இருக்கே
என் கண்மணி.....
ஒரு எஸ்ஸெம்மஸ்கூட
இல்லாமல்...'

விழி மேய்ந்து
முடிப்பதற்குள் அலறும்
தொலைபேசியைக்
காதுக்குக் கொடுக்கும்போதே
காதலாய்க் கசிகிறது
உன் குரல்....

" எங்கேடா போயிருந்தே
என் கண்மணி.....
அட்லீஸ்ட் ஒரு
எஸ்ஸெம்மஸ் கூட
இல்லாமல்....."

- செய்தியில் விடவும்
குரலில் உடைகிறது
மனசு.
_ ரிஸ்கி ஷெரீப்
அடங்கியிருந்த
கைப்பேசியை
உயிர்ப்பிக்கக்
காத்திருந்து
வருகிறது
உன் குறுஞ்செய்தி....

' எங்கேடா இருக்கே
என் கண்மணி.....
ஒரு எஸ்ஸெம்மஸ்கூட
இல்லாமல்...'

விழி மேய்ந்து
முடிப்பதற்குள் அலறும்
கைப்பேசியைக்
காதுக்குக் கொடுக்கும்போதே
காதலாய்க் கசிகிறது
உன் குரல்....

" எங்கேடா போயிருந்தே
என் கண்மணி.....
அட்லீஸ்ட் ஒரு
எஸ்ஸெம்மஸ் கூட
இல்லாமல்....."

செய்தியில் விடவும்
அதிகம்
குரலில் உடைகிறது
மனசு.

_ ரிஸ்கி ஷெரீப்

கருத்துகள் இல்லை: