மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

காகம் தேடும் விருந்தினன்

ஓட்டுக்கூரை
தேடிவந்துருகிக்
காகம் கரையக்
கேட்கும் போதெல்லாம்,

உயிரழுத்தி
முடுக்கி -
விட்டாற்போலத்தான்
ஓடிவந்தொளிந்து
பார்க்கிறேன்,

என் வாசல்
தேடியொரு
விருந்தினனாயேனும்
நீ வரமாட்டாயாவென்று...

உனையிழந்து
பொட்டுதிர்த்த
காலம் காலமாய்
நடக்கிறது,

காகம் கூரையமர்ந்து
கரைவதும்...

நான் -
வழி பார்த்தேங்கித் -
திணறும் மாரடைக்கத்
திரும்புவதும்...

ஆவலாய் நான்
அலைந்து தேடும் நீ
ஆலாய்ப் பறந்து
வராமலே போனாலும்...

ஒருநாள் -
உயிர் தளம்பக்
கரைந்து
பறந்து வரக்கூடும்


- என் கூரைக் காகம்
தேடும் விருந்தினன்.


- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: