மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 6 ஏப்ரல், 2013

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது?


Photo: உன்னால் மட்டும் எப்படி முடிகிறது?

கனிந்து பேசவும்
கசிந்துருகிக் 
-கரையவும்...

கண்கள் சொருகவும்
காத்திருப்புச்
சுவை சுகிக்கவும்...

கசங்கவும்...
காற்றுத்தின்றுலா
-வரவும்...

உயிரில் துளிர்க்கவும்
உணர்வெரிந்து
குளிரவும்...

மணக்கவும்
மன்னிக்கவும்...
மருதாணியுடுத்தி
மகிழவும்...

மடியில் புதையவும்
மனசொடிந்து 
விம்மித் திரியவும்...

திகைக்கவும்
தித்திக்கவும்
செந்தணலின்றித் 
தவிக்கவும்,

புணரவும்
அருந்தப் புனலிருந்து
தாகிக்கவும்,

- தெரிந்த,

காதலால் மட்டும்தான்
- முடிகிறது,

மனசுகளின் கழுத்தை
அறுத்துப் பார்க்கவும்
- நேர்த்தியின்றிக்
கிழித்துப் பார்க்கவும்.
     
 - ரிஸ்கி ஷெரீப்.
கனிந்து பேசவும்
கசிந்துருகிக்
-கரையவும்...

கண்கள் சொருகவும்
காத்திருப்புச்
சுவை சுகிக்கவும்...

கசங்கவும்...
காற்றுத்தின்றுலா
-வரவும்...

உயிரில் துளிர்க்கவும்
உணர்வெரிந்து
குளிரவும்...

மணக்கவும்
மன்னிக்கவும்...
மருதாணியுடுத்தி
மகிழவும்...

மடியில் புதையவும்
மனசொடிந்து
விம்மித் திரியவும்...

திகைக்கவும்
தித்திக்கவும்
செந்தணலின்றித்
தவிக்கவும்,

புணரவும்
அருந்தப் புனலிருந்து
தாகிக்கவும்,

- தெரிந்த,

காதலால் மட்டும்தான்
- முடிகிறது,

மனசுகளின் கழுத்தை
அறுத்துப் பார்க்கவும்
நேர்த்தியின்றிக்
கிழித்துப் பார்க்கவும்.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: