மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 6 ஏப்ரல், 2013

சாபம்

Photo: சாபம்

காலத்துக்கும்
சிறைவாடிக்
களி தின்னச்
சாபம் பெற்ற,

ஆயுள் கைதிக்
கணவன் நினைப்பில்
உருகியொடிந்து,

உண்ணாமல்
உறங்காமல்
உயிரில் கரையும்
- மனைவி,

உணர்வற்றுத்தான்
- இருக்கிறாள்...

வரமின்றித்
தன் வீட்டுக்
கூண்டுக்குள் வசிக்கும்
ஜோடிக் கிளிகளைத்
திறந்துவிட.
    _ ரிஸ்கி ஷெரீப்.
காலத்துக்கும்
சிறைவாடிக்
களி தின்னச்
சாபம் பெற்ற,

ஆயுள் கைதிக்
கணவன் நினைப்பில்
உருகியொடிந்து,

உண்ணாமல்
உறங்காமல்
உயிரில் கரையும்
- மனைவி,

உணர்வற்றுத்தான்
- இருக்கிறாள்...

வரமின்றித்
தன் வீட்டுக்
கூண்டுக்குள் வசிக்கும்
ஜோடிக் கிளிகளைத்
திறந்துவிட.

_ ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: