எரிய மறுக்கும் விறகடுப்பின்
சாம்பர் குளித்துச் சாதம்
வடிக்க விழையும் இளந்தாய்
சாம்பர் குளித்துச் சாதம்
வடிக்க விழையும் இளந்தாய்
குழந்தைப் பசியலறல் பொறுத்தும்-
தன்னாசை பொத்திக் கசக்கியும்தான்
இன்றைய பகல் பொழுதையும்
எந்நாளும்போலக்
கசந்தும் காதலற்றும்
இரத்த விறாளாகி
வியர்வையெரிக்கத்தான்
கழிக்க வேண்டியிருக்கும்
குடிகாரக் கணவனின்
விலங்கிச்சைப் பிடிக்குள்
மனசலறிச் செத்து...
அழகுத் தோல் முகம்
களையிழக்க முளைக்கும்
கறுப்புத் தேமல்களுக்குத்
தெரியப் போவதில்லை...
விருந்தோம்பல் தினத்தின்
மகிமையும் மகத்துவமும்.
ரிஸ்கி ஷெரீப்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக