மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

ஒற்றைக் கொலுசின் இசை

மனசணிய
உன் -
காதலும்
வேணாம்

உடலணிய
உன் -
தொடுகையும்
வேணாம்

விழியணிய
உன் -
நாணமும்
வேணாம்

விருந்தணிய
உன் -
சமையலும்
வேணாம்

உன்னால்
முடியுமாயின் -
உன் காலின்

ஒற்றைக்
கொலுசையாவது
தந்துவிட்டுப்
- போயேன்...

என் -
செவியணிந்து
இசை கேட்க.

ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: