மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 23 செப்டம்பர், 2019

என் வாழ்க்கையை....



ன் வாழ்க்கையை
மறுபதிப்பாக மட்டும்
வெளியிட நேர்ந்தால்....

எத்தனை பிழைகளைத்தான்
திருத்துவது?

இல்லை
எத்தனை பக்கங்களைத்தான்
கிழித்தெறிவது?

எப்படியோ,

எல்லோரும் வாசிக்கும்படி
மலிவுப்பதிப்பாகயேனும்
இருந்துவிட வேண்டும்
எனது மறுபதிப்பு.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: