மழை பொழிந்தோய்ந்ததோர் பொழுதில்
மனசை நனைத்து
ஈரம்
சொட்டச் சொட்ட...
நீ எடுத்துச் செல்ல
மறந்த குடை,
மடிப்புக் கலைந்து
உலர்ந்து சுருங்கி
வாசல் கதவிடுக்கில்
அப்படியேதான் இருக்கிறது....
என் வீட்டுத் திண்ணை
கழுவிச் செல்ல
எத்தனையோ மழைகள்
வந்துபோன பிறகும்.
#ரிஸ்கிஷெரீப்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக