இசையின்
இடுப்பு மடிப்பில்கூட
சொக்கித் தளர்ந்துறங்கிடாத இரவுகள்; அவை இனிப்பான கவிதைகள். அவற்றின் அழகு கறுப்பால் எழுதப்பட்டிருக்கிறது. இருட்டு ஒட்டடைக்கஞ்சித்தான் நம்மில் பலர் "இரவு"களை வாசிப்பதில்லை. "இரவு"களில் சுவாசிப்பதுமில்லை."சோம்பல்" போர்வைக்குள் சிறையிருப்பவர்கள்,
அவர்கள்
இரவுகளை ஒளித்துவைத்தேபழக்கப்பட்டவர்கள்...
நட்சத்திர ஊர்வலங்களை தரிசிக்கவா போகிறார்கள்? #ரிஸ்கிஷெரீப்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக